ஜெ., "கை' காட்டுபவர்தான் பிரதமர்திருச்சியில் குண்டு கல்யாணம் பேச்சு

திருச்சி: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, திருச்சியில் தொடர்

பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை பகுதியில் நேற்று

முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.,வின் தலைமை கழக பேச்சாளரான

குண்டு கல்யாணம் பேசியதாவது:கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அனைவரும்

பாதிக்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின், மக்கள் பயன்

அடையும் பல திட்டங்களை வாரி வழங்கி வருகிறார். தி.மு.க., ஆட்சியில் செய்த

தவறு காரணமாக இன்று மின்வெட்டு நிலவி வருகிறது. இந்த மின்வெட்டை சரி செய்ய

ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

உடன்குடியில் எட்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனல்மின் நிலையம்

துவங்கப்படும் என அறிவித்துள்ளார். இன்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக

இருக்க ஜெயலலிதா தான் காரணம். அதை மறந்து ஜெயலலிதா முன்னிலையில்

விஜயகாந்த் நாக்கை துருத்தி பேசியது தவறு.2011ல் அ.தி.மு.க., அழியும் என

அழகிரி சொன்னார். 2011 இல்லை 3011ம் ஆண்டில் கூட, அ.தி.மு.க.,வை யாராலும்

அழிக்க முடியாது. தமிழக சட்டசபையை ஆளும் தகுதி அ.தி.மு.க.,வுக்கு மட்டும்

தான் உள்ளது. இன்று மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்க தயக்கம் காட்டி

வருகிறது.விரைவில் லோக்சபா தேர்தல் வருகிறது. ஜெயலலிதாவுக்கு இந்தியாவை

ஆளும் தகுதி இருக்கிறது. அவர் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் அடுத்த

பிரதமர். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் அமைச்சர் சிவபதி,

எம்.எல்.ஏ.,க்கள் மனேகாரன், பரஞ்ஜோதி, மேயர் ஜெயா, துணைமேயர் ஆசிக்மீரா,

பகுதி செயலாளர் கலிலுல்ரகுமான் உள்பட பலர் பங்கேற்றனர்.