புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர்
மன்மோகன் சிங் கலந்து கொண்டு 311 பேருக்கு பட்டம் வழங்குகிறார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு இரண்டு நாட்கள் பயணமாகபிரதமர் மன்மோகன்சிங்
இன்று வருகிறார். ஜிப்மர் கல்லூரியில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவில்
311 பேருக்குப் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் குலாம் நபி ஆசாத், இணை
அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் இக்பால்சிங், முதல்வர் ரங்கசாமி, கண்ணன்
எம்.பி., ஜிப்மர் நிறுவன தலைவர் கங்குலி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சக
செயலர் பிரதான் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
311 பேருக்கு பட்டம்
விழாவில், பி.எச்.டி., 7 எம்.சி.எச்-4, டி.எம்-1, எம்..டி.,86, எம்.எஸ்-44,
முதுகலை பட்டய படிப்பு-6, எம்.எஸ்சி., மெடிக்கல் பையோ கெமிஸ்-9,
எம்.பி.பி.எஸ்.,-67, எம்.எல்.டி.,-22, நர்சிங்-65 என மொத்தம் 311 பேருக்கு
பட்டம் வழங்கப்படுகிறது என ஜிப்மர் இயக்குனர் ரவிக்குமார்தெரிவித்தார்.
