ஜெ., பிறந்த நாள் விழா64 பேர் உடல் உறுப்பு தானம்

வேலூர்: வேலூர் மாநகர மாவட்ட மாணவர் அணி சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா

பிறந்த நாள் விழாவையொட்டி, 64 பேர் உடல் உறுப்பு தானம் மற்றும் ரத்த தான

முகாம் நடந்தது.மாவட்ட மாணவர் அணி செயலாளர் வள்ளலார் ரமேஷ் தலைமை

வகித்தார். வேலூர் நகர செயலாளர் வேதகிரி வரவேற்றார். அமைச்சர் டாக்டர்

விஜய் முகாமை துவக்கி வைத்தார். அப்போது, 64 பேர் உடல் உறுப்பு தானம், 40

பேர் ரத்த தானம் செய்தனர்.

அதற்கான சான்றிதழ்களை, அமைச்சர் விஜய் வழங்கினார். மாணவர் அணி நிர்வாகிகள்

சிவக்குமார், ஆனந்தன், பாலு, தண்டபாணி, இளஞ்செழியன், சீனிவாசன் உட்பட பலர்

கலந்து கொண்டனர்.முதல்வர் பிறந்த நாளையொட்டி, எத்தனையோ விழாக்கள்

நடந்தாலும், அதில் உடல் உறுப்பு தானம் செய்யும் விழா, வேலூரில் நடந்தது,

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது, என, அமைச்சர் விஜய்

பாராட்டினார்.