புதுச்சேரி:தமிழக முதல்வர் ஜெ., பிறந்த நாளையொட்டி, அரசு மருத்துவமனையில்
பிறந்த 60 குழந்தைகளுக்கு அ.தி.மு.க., சார்பில் மோதிரம் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு 24ம் தேதி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது.
நேற்று அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில், அன்பழகன் எம்.எல்.ஏ., 60
குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கினார். நிகழ்ச்சியில்
ஜெ.,பேரவை செயலாளர் ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., துணைச் செயலாளர்
புரு÷ஷாத்தமன் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பாஸ்கர்
எம்.எல்.ஏ., நகர செயலாளர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும்,
பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள சந்தோஷ் காப்பகத்தில் 100 குழந்தைகளுக்கு
மதிய உணவும், ஊசுடு அருகில் உள்ள சகோதர நலவாழ்வு மையத்தில் மன நலம்
குன்றியவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
