ஜெய்ப்பூர் : டீ குடித்த 5 பேர் மரணம்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் உள்ள கோயாலா கிராமத்தில், காலை நேரத்தில் டீ சாப்பிட்ட 5 பேர் பலியான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலப்பட டீயே, உயர்ப்பலிக்கு காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விஷம் கலந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலியான 5 பேரில், ஒருவர் 5 வயது பெண்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5 பேர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.