ஜெய்ஸ்வாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்?

புதுடில்லி: உ.பி., சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபிரசாத் ஜெய்ஸ்வால் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு குறித்த வீடியோவை அனுப்பி வைக்கும்படி, மாவட்ட நிர்வாகத்திற்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை ஆராய்ந்த பின்பே ஜெய்ஸ்வால் மீதான நடவடிக்கை குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.