சேலம்: தமிழக மக்களுக்கு மின்வெட்டு பிரச்னை, பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றை தொடர்ந்து, மின்வெட்டு பிரச்னை ஓரளவுக்கு குறைந்து காணப்பட்டது. கடந்த இரண்டு மாதமாக மீண்டும், அதே நிலை தொடர்ந்து வருகிறது.வணிக நிறுவனங்கள் ஜெனரேட்டர்களையும், வசதி படைத்தவர்கள், தங்கள் இல்லங்களுக்கு யூ.பி.எஸ்., பொருத்தி மின் பிரச்னையை சமாளித்து வருகின்றனர். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
அவர்களின் சிக்கலுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், சமீபகாலமாக வட மாநிலங்களில் இருந்து, அவசர கால மின் விளக்குகள் (எமர்ஜென்சி லைட்டுகள்) அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சேலம் புது பஸ் ஸ்டாண்டு மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில், அதிகளவில், அவசர கால விளக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. 250ல் இருந்து, 1,000 ரூபாய்க்கு மேல் அவசர கால விளக்குகள் விற்பனை செய்யப்படுவதால், அனைத்து தரப்பு மக்களும் அதை வாங்கி செல்கின்றனர்.இதுகுறித்து எமர்ஜென்சி லைட் விற்பனையாளர் கதிரவன் கூறியதாவது:மும்பை, புனே உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான எமர்ஜென்சி விளக்குகள், சேலத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இங்கிருந்து, சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு பலர் கொள்முதல் செய்கின்றனர்.எல்.இ.டி., மற்றும் சி.எப்.எல்., பல்புகள் பொருத்தப்பட்ட எமர்ஜென்சி லைட்டுகள், டியூப் லைட், டார்ச் லைட், சிம்னி விளக்கு வடிவம் என, பல மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது.வீட்டுக்குள் மட்டும் அல்லாமல், பொதுமக்கள், இந்த விளக்குகளை வெளியிலும் எடுத்த செல்லலாம். லைட்டுக்களுக்கான பேட்டரியும் வாரன்டியுடன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம், நான்கு மணி நேரம் வரை எமர்ஜென்சி விளக்குகள் எரியும். 250ல் இருந்து, 1,000 ரூபாய்க்கு மேல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.விரைவில், அரசு பொது தேர்வு துவங்கப்பட உள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் பெற்றோர், அதிகளவில், எமர்ஜென்சி லைட்டுக்களை வாங்கி செல்கின்றனர். சமீபகாலமாக இரவு நேரங்களிலும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்னையால், இந்த விளக்குகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கதிரவன் கூறினார்.
தொடரும் மின்வெட்டு பிரச்னையால்அவசர கால மின் விளக்குகளுக்கு மவுசு
தினமலர் – வி, 23 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; …
- சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக்கில் மனித …
- மின் தடையால் விசை இழந்த தறிகள்: …
- "கை' கொடுத்தது இயற்கை: மின் பயன்பாடு, …
- 8 மணி நேரத்துக்கு மேல் மின் நிறுத்தம் …
- பூம்புகார் விற்பனை நிலையத்தில் கோடை …
- ஆறுமுகநேரி பகுதியில் பதனீர் சீசன் …
- காற்றாலை மின் உற்பத்தி 2,300 மெகாவாட்டாக …
- நூதன முறையில் லாட்டரி விற்பனை
- புதிய மின் இணைப்பு பெற 17 ஆயிரம் …
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 50 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
