சேலம்: சேலம், திருமணிமுத்தாறு ஆற்றோரத்தில் நேற்று காலையில், வாசவி மஹால் அருகே அரூரில் இருந்து வந்த தக்காளி பழங்கள் வேனில் இருந்து இறக்கப்பட்டது. அப்போது, அங்கு ரோந்து வந்த டவுன் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த கனகராஜ், வேன் டிரைவரிடம் வண்டியை எடுக்கச் சொல்லி தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த வியாபாரிகள், போலீஸ்காரரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
