தேடல்

டீ கடை பெஞ்சு

இடுப்புல யாரோ கிள்ளிட்டாய்ங்க...!

பிறந்த நாள் விழா எழுச்சியில, இடுப்ப கிள்ளிட்டாங்கங்க... என,
கிளுகிளு மேட்டருடன், பெஞ்ச்சில் வந்தமர்ந்தார் அந்தோணிசாமி.
யாரோட இடுப்பு ஓய்... சீக்#கிரமா சொல்லும்... என, கண்ணைமலர்த்தி, அனைத்துப் பற்களும் தெரிய சிரித்தவராய், கேட்டார் குப்பண்ணா.
தி.மு.க., தலைவரோட பிறந்த நாளன்னிக்கு, முதல்ல வாழ்த்து சொல்ல, கோபாலபுர வீட்டுக்கு, நடிகை குஷ்பு போனாங்கங்க...தலைவரு
அறிவாலயத்துக்கு போயிட்டதால, குஷ்புவும் அங்கபோனாங்க... கூட்டம் அதிகமா இருந்ததால, வாழ்த்து சொல்ல முடியாம, திரும்பிட்டாங்க...
அப்புறமா, மாலையில் நடந்த பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்துல கலந்துக்கிட்டு, முதல் வரிசையில உட்கார்ந்திருந்தாங்க... கூட்டம் முடிஞ்சதும், குஷ்புவும் கிளம்பியிருக்காங்க... அப்ப, அவரோட இடுப்பை, யாரோ கிள்ளிட்டாங்க... கோபம் தலைக்கேற, கூச்சல் போட்டு, அமர்க்களப்படுத்தினாங்க... சுத்தி இருந்தவங்க சமாதானப்படுத்தி, அவங்களை அனுப்பி வச்சிட்டாங்க... விஷயம் வெளியில தெரிஞ்சா, குஷ்புவுக்கும் மானம் போயிடும்;
கட்சிக்கும் தர்ம சங்கடமாயிடும்னு, விஷயத்தை அப்படியே மூடி மறச்சிட்டாங்கங்க... என, விவரித்தார் அந்தோணி சாமி.
பொது இடத்துல இப்படியெல்லாம் நடக்கறதா ஓய்... எனக் கூறிய குப்பண்ணா, அடுத்த மேட்டருக்குத் தாவினார்...
ஆவினில் ஒரு குடும்ப ஆதிக்கம் உச்சத்தில் இருக்காம் ஓய்... என்ற குப்பண்ணாவிடம்,
எந்த ஆவினில் பா... எனக் கேட்டார் அன்வர்பாய்.
மதுரை ஆவினில் தான் ஓய்... தொழிற்சங்கம் பேர்ல, ஒரே குடும்பத்தை சேர்ந்தவா, கோலோச்சிண்டு இருக்காளாம்... அ.தி.மு.க., - காங்., சார்பு தொழிற்சங்கத்துல, ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் தான், பொறுப்புல இருக்கா... டெண்டர் உள்ளிட்ட எல்லா விஷயத்திலும், அவாளுக்குள்ளேயே பேசி, சரி செஞ்சுக்கறா... என, குண்டை போட்டார் குப்பண்ணா.
அது எப்படி பா நடக்கும்... அ.தி.மு.க., எங்கே... காங்., எங்கே... என கேட்டார் அன்வர்பாய்.
எல்லாம் தெரிஞ்சும், ரெண்டு கட்சியிலும் யாரும் கண்டுக்கலே ஓய்... அவா ரெண்டு பேரும் சேர்ந்து போடற ஆட்டத்துல, அதிகாரிகள் தரப்பு தான் ஆடிப் போயிருக்கு... என, குப்பண்ணா கூற,
இது கூட நல்ல கூட்டணியா தான் இருக்கு வே... என, கமென்ட் அடித்தார் அன்வர்பாய்.
ஜாதகம் அவருக்கு சாதகமாக இருக்குறதால, ஆக்டிவ் பாலிடிக்சுல குதிச்சிட்டாவ வே... என, கடைசிதகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.
யாருங்க... எனக் கேட்டார் அந்தோணிசாமி.
டி.ராஜேந்தரை தான் சொல்லுதேன்... கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன், அரசியல்லேர்ந்து காணாமல் போன அவரு, இப்போ, தீவிர அரசியல்ல இறங்கிட்டாரு... குரு பெயர்ச்சி அவருக்கு, சாதகமா இருக்காம்...
அதனால, புதுக்கோட்டை இடைத் தேர்தல்ல தன்னை பொது வேட்பாளரா, எந்த கட்சியாவதுநிறுத்தும்னு எதிர் பார்த்தாரு...அது நடக்காததால, தேர்தல்ல போட்டியிடுற திட்டத்தை கைவிட்டுட்டாரு...பெட்ரோல் விலை உயர்வை கண்டிச்சு, மதுரை, சென்னையில ஆர்ப்பாட்டம் நடத்தி முடிச்சிக்காரு... லோக்சபா தேர்தல்ல, அ.தி.மு.க., அல்லது தி.மு.க., கூட்டணியில, ஒரு சீட்டு வாங்க தான், இப்பவே துண்டு விரிக்க ஆரம்பிச்சிட்டாருன்னு, எல்லா கட்சிக் காரங் களும் பேசிக்காவ வே... எனக் கூறியபடியே நடையைக் கட்டினார் அண்ணாச்சி; மற்றவர்களும்!