புதுடில்லி: எதிரி நாடுகளின் ஏவுகணைத்தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, டில்லி மற்றும் மும்பையில் ஏவுகணைப் பாதுகாப்புக்கவச முறைகளை நிறுவ,ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.,) முடிவு செய்துள்ளது.இதுதொடர்பான விரிவானதிட்ட முன்மொழிவுகள், பாதுகாப்பு தொடர்பான மத்தியஅமைச்சரவையின் ஒப்புதலுக்காக தயாராகி வருகின்றன.
இது தொடர்பாக,டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் கூறியதாவது:டில்லி மற்றும் மும்பையில் ஏவுகணைப் பாதுகாப்புக் கவசமுறைகளை நிறுவுவது தொடர்பான திட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கி விட்டன. இருந்தாலும், திட்டம் குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின், அரசிடம் இறுதிமுன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும். எதிரி ஏவுகணைகளைகண்டறியக் கூடிய ரேடார்களை நிறுவும் இடங்கள், பதில்தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகளை எங்கு வைப்பதுபோன்றவை எல்லாம் பின்னர் தீர்மானிக்கப்படும். இந்த இடங்கள் ரகசியமானதாகவும், எதிரிகளின் சதிகளில் இருந்து தப்பிக்கும் வகையில் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
அழித்து விடும்: டில்லி மற்றும் மும்பையைத்தாக்க வான் வழியாக எதிரி நாடுகளின் ஏவுகணைகள் வந்தால்,அதை உடனே இந்தப் பாதுகாப்புக் கவச முறைகள் கண்டறிந்து,உடன் அந்த ஏவுகணைகளைத்தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகள் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று, குறிப்பிட்ட தூரத்திலேயே அவற்றை அழித்துவிடும்.இந்த ஏவுகணைப் பாதுகாப்புக் கவச முறைகள், முழுமையாகத்தானியங்கி முறையில்இயங்கக் கூடியவை என்பதால்,அவற்றை பராமரிக்க பெரியஅளவில் ஆட்கள் தேவையில்லை. மனிதர்களின் தலையீடு குறைந்த அளவிலேயேதேவை. டில்லி மற்றும் மும்பையில் இந்த ஏவுகணைப் பாதுகாப்புக் கவச முறைகள் அமைக்கப்பட்ட பின், மற்ற பெரிய நகரங்களிலும் இவற்றை நிறுவுவதுகுறித்து பரிசீலிக்கப்படும்.ராணுவ ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைப் பாதுகாப்பு முறைகள்,ஏற்கனவே பல முறை பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைப் பாதுகாப்பு முறைசெயல்பாட்டுக்கு வந்தால், எதிரியின் ஏவுகணையை, 2 ஆயிரம் கி.மீ., தூரத்திற்குள் தாக்கிஅழித்து விடும். பிருத்வி ஏவுகணைகள் உதவியுடன் இந்தமுறைகள் பரிசோதிக்கப்பட்டு,அதன் செயல்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏவுகணைப் பாதுகாப்புக் கவச முறைகளை நிறுவுவதற்கான, நீண்ட தூரக் கண்காணிப்பு ரேடார்கள், எதிரி ஏவுகணைகளை கண்டறியும் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டுமுறைகள் எல்லாம் கூட பரிசோதிக்கப்பட்டு விட்டன. இந்தமுறை, 2016ம் ஆண்டுக்குள்,ஐந்து ஆயிரம் கி.மீ., தூரத்திற்குள் எதிரி ஏவுகணைகளைதாக்கி அழிக்கும் வகையில்மேம்படுத்தப்படும்.
நான்காவது நாடு இந்த ஏவுகணைப் பாதுகாப்புக் கவச முறை முதன்முறையாக, 2006ம் ஆண்டு பரிசோதிக்கப்பட்டது. இதன்மூலம், இந்தகவச முறைகளை கொண்டுள்ளஅமெரிக்கா, ரஷ்யா மற்றும்இஸ்ரேல் நாடுகள் வரிசையில்இந்தியாவும் சேர்ந்துள்ளது.இவ்வாறு டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் கூறினர்.
டில்லி, மும்பை நகரங்களை ஏவுகணைகளால் தாக்க முடியாது: பாதுகாப்பு கவச ஏவுகணைகளை பொருத்த ராணுவம் முடிவு
தினமலர் – ஞா, 24 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
புக்கிகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது: பி.சி.சி.ஐ.,
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி!
தினமலர் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்புக்கிகளை கட்டுப்படுத்த முடியவில்லை: ஸ்ரீனிவாசன்
தினமலர் - 1 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்தேசிய அணுசக்தி கழகம் அறிவிப்பு
தினமலர் - 1 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்மேட்டூர் அணை நிலவரம்
தினமலர் - 2 மணிநேரம் 1 நிமிடம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

