தேடல்

திண்டிவனம் அருகே விபத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி

திண்டிவனம் : திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இறந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அனந்தபுரம் போலீஸ் ஸ்டேஷனில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராஜேந்திரன்,51. இவர் தனது மகள் லட்சுமியுடன்,21. இருவரும், இரு சக்கர வாகனத்தில் திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி நேற்று மதியம் சென்றார். பிற்பகல் 2 மணியளவில், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் அருகே பின்னால் வந்த, மினி லோடு கேரியர் வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த அவரது மகள் லட்சுமி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திய மினி லோடு கேரியர் வாகன டிரைவர்தப்பி ஓடிவிட்டார்.இந்த விபத்து குறித்து, மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.