தேடல்

துணை ஜனா‌திபதி தேர்தல்:திரிணாமுல் பதில்

புதுடில்லி : ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து தமது முடிவை ஆகஸ்ட் 6ம் தேதி அறிவிக்க உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இத்தகவலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் அறிவித்துள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரியும், பா.ஜ., கூட்டணி சார்பில் ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.