புதுடில்லி: நக்சலைட் பாதிப்பிற்குள்ளான மாநிலங்களில் கூடுதலாக 400 போலீ்ஸ் நிலையங்கள் அமைக்கவும், ரூ.120 கோடி செலவிடமும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவர்களை ஒடுக்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், மேற்குவங்கம், ஒடிசா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார்,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த சில மாவட்டங்கள் உள்ளன.இவர்களால் போலீசார் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.கடந்த 2011-ம் ஆண்டில் நக்சல்களால் 447 அப்பாவிமக்கள், 142 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களை ஒடுக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை வகுத்து வருகிறது. இத்திட்டத்தி்ற்காக இதுவரை ரூ.1,391 கோடி செலவிட்டுள்ளது. சரணடையும் நக்சல்களுக்கு மறுவாழ்வு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் நாடு முழுவதும் 8 மாநிலங்கிளல்83 மாவட்டங்கள் நக்சல்களால் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
இம்மாவட்டங்களில் தற்போது 400 போலீஸ் ஸ்டேசன்கள் அமைப்பதற்கு ரூ. 120 கோடியை முதற்கட்டமாக ஒதுக்கியுள்ளது. இவற்றில் பீகாரில் 85, சத்தீஷ்கர், 75, ஜார்க்கண்ட்,75, ஓடிசா,70 மேற்குவங்கம,18, மத்தியபிரதேசம்,12, என 400 போலீஸ் ஸ்டேசன் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு ஸ்டேசன்களுக்கும் தலா ரூ. 2 கோடி வீதம் ரூ. 120 கோடி ஒத்துக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக மத்தியஅரசின் , தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க காங். ஆட்சி செய்யாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் நக்சல்களை ஒடுக்க மத்திய அரசு காவல்துறை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நக்சல் பாதிப்பு மாநிலங்களில் 400 போலீஸ் ஸ்டேசன்கள்
தினமலர் – ஞா, 26 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 50 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
