நல்ல இடத்துக்காக காத்திருக்கிறேன்! மிதுனா!!

கருத்தம்மா பட புகழ் ராஜஸ்ரீயின் தங்கை மிதுனா, மாமதுரை படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அவர் இப்போது நடிப்பில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார். அக்கா பேரை சொல்லி எந்த இடத்திலும் வாய்ப்பு ‌கேட்க போவதில்லை என்றும், இந்த வருடம் பல படங்களில் நடிக்க முயற்சி செய்வதாகவும் கூறியுள்ள மிதுனா, புதுமுகம் அரவிந்த் இயுக்கி நடித்திருக்கும் காதல் பிசாசே படத்தில் போலீஸ் ரோலில் நடித்திருப்பதாகவும், அந்த ரோலுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டதாகவும், அதற்காக 10 நாட்கள் கடுமையாக பயிற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்காக காத்திருப்பதாகவும், நல்ல கதைகள் கிடைத்தால் எவ்வளவு கஷ்டப்பட்டும் நடிக்க தயார் என்கிறார்.