புதுடில்லி: நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி, நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் சரிவடைந்து 328 கோடி டாலராக (சுமார் ரூ.16,400 கோடி) உள்ளது. இது, 2011 ஜனவரி மாதத்தில் 340 கோடி டாலராக இருந்தது. முக்கிய சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதற்கான தேவைப்பாடு குறைந்ததால் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது என நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில், மே மாதத்தில் நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி வளர்ச்சி 33 சதவீதம் என்ற அளவில் அமோகமாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் இந்த வளர்ச்சி விகிதம் 15 சதவீதமாக குறைந்தது. பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டதால் வைர, தங்க நகைகள் இறக்குமதியை மேலை நாடுகள் குறைத்துக் கொண்டதே இதற்கு காரணமாகும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலிருந்து தங்க, வைர ஆபரணங்கள் ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் தேவைப்பாடு குறைந்து வரும் நிலையில் ஏற்றுமதியாளர்கள் பாரம்பரிய சந்தைகளை விடுத்து லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ரஷ்யா போன்ற புதிய சந்தைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி சரிவடைந்தது
தினமலர் – ஞா, 26 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- கைவினை பொருள்கள் ஏற்றுமதி உயர்வு
- கைவினை பொருட்கள்ஏற்றுமதி இலக்கு ரூ.16,000 …
- அமெரிக்கா, ஐரோப்பா கைவிட்ட போதிலும் …
- நாட்டின் காபி உற்பத்தி 3.20 லட்சம் …
- சீனாவின் இறக்குமதியால் உலக பருத்தி …
- நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்...நாட்டின் …
- உரத்திற்கான தேவை 4 சதவீதம் அ …
- நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில்...முக்கிய …
- நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்...பரஸ்பர …
- மார்ச் மாதத்தில் தொழிற்சாலை உற்பத்தி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 50 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
