திருவெண்ணெய்நல்லூர்:தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு
நிவாரண உதவி வழங்கப்பட்டது.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த காந்திக்குப்பத்தில்
ஏற்பட்டதீ விபத்தில் ஏழுமலை, வீரன், பெரியாயி ஆகியோரின் வீடுகள்
சேதமடைந்தன.விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா 5
ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை வெங்கடேசன் எம்.எல்.ஏ., வழங்கினார். இதேபோல்
தே.மு.தி.க., சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டது.
