ஹராரே:வங்கதேச அணிக்கு எதிரான டுவென்டி-20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் முத்தரப்பு டுவென்டி-20 தொடரில் விளையாடுகின்றன. ஹராரேயில் நேற்று நடந்த ஐந்தாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் ஆம்லா பேட்டிங் தேர்வு செய்தார்.ஆன்டாங் ஆறுதல்:முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு டு பிளசிஸ் (13) ஏமாற்றினார். அடுத்து வந்த இங்ராம் (1) நிலைக்கவில்லை. சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஆம்லா (20), ஆன்டாங் (41) ஆறுதல் தந்தனர். பெஹார்டியன் (16), ஆல்பி மார்கல் (12) ஓரளவு ரன் சேர்க்க, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் சார்பில் இலியாஸ் சன்னி 2 விக்கெட் கைப்பற்றினார்.அஷ்ரபுல் நம்பிக்கை:சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு சித்திக் (5) ஏமாற்றினார். அடுத்து வந்த அனாமுல் (4), முஸ்பிகுர் ரஹிம் (7), நாசிர் ஹொசைன் (0) சொற்ப ரன்களில் வெளியேறினர். விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய முகமது அஷ்ரபுல் (40) நம்பிக்கை தந்தார். மகமதுல்லா (28), ரஹ்மான் (27*) கைகொடுக்க, வங்கதேச அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் டிலாங்கே 3, பார்னல் 2 விக்கெட் வீழ்த்தினர்.பைனல் வாய்ப்பு:ஏற்கனவே ஜிம்பாப்வேயிடம் தோல்வி கண்ட தென் ஆப்ரிக்கா, 4 புள்ளிகளுடன் (3 போட்டி) கடைசி இடத்தில் உள்ளது. தலா இரண்டு வெற்றியை பெற்ற ஜிம்பாப்வே (3 போட்டி), வங்கதேச (4 போட்டி) அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முதலிரண்டு இடத்தில் உள்ளன. தென் ஆப்ரிக்க அணி பைனலுக்கு முன்னேற, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று நடக்கவுள்ள கடைசி போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
தென் ஆப்ரிக்கா மீண்டும் தோல்வி * வங்கதேசம் அபாரம்
தினமலர் – வெ, 22 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - ச, 25 மே, 2013
தொடர்புடைய செய்திகள்
- வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே …
- கோப்பை வென்றது ஜிம்பாப்வே : சிபண்டா …
- புனே அணி ஆறுதல் வெற்றி : டில்லிக்கு …
- சென்னையா...மும்பையா :கோப்பை வெல்வது …
- பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஸ்காட்லாந்து
- பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றி : மும்பை …
- கிரிக்கெட்: ராஜஸ்தான் அணி வெற் …
- பெங்களூரு அணி 106 ரன்கள்
- பைனலுக்கு செல்லுமா சென்னை: இன்று மும்பையுடன் …
- பிளே-ஆப் சுற்றில் ஐதராபாத்: வீழ்ந்தது …
- ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி : …
- கோல்கட்டா அணியிடம் வீழ்ந்தது புனே …
- பெங்களூரு திரில் வெற்றி: கோஹ்லி, …
- கிரிக்கெட்: மும்பை அணி வெற்றி
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
7 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை
தினமலர் - 48 நிமிடங்கள் முன்சோனியா, மன்மோகன் ராய்ப்பூர் வருகை
தினமலர் - 51 நிமிடங்கள் முன்கிரிக்கெட் சூதாட்டங்களை தடுக்க விரைவில் புதிய சட்டம்அமைச்சர் கபில்
தினமலர் - 54 நிமிடங்கள் முன்குருநாத் மெய்யப்பன் சஸ்பெண்ட் ?
தினமலர் - 55 நிமிடங்கள் முன்பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
-shakes.jpg)
