ஆக்லாந்து: பரபரப்பான மூன்றாவது டுவென்டி-20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, நியூசிலாந்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-1 என கைப்பற்றியது.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று டுவென்டி-20 போட்டிகளில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இருந்த நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி நேற்று ஆக்லாந்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது.
லெவி ஏமாற்றம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. கடந்த போட்டியில் அதிவேக சதம் அடித்த ரிச்சர்ட் லெவி இம்முறை 11 ரன்களுக்கு வெளியேறினார். பின் ஆம்லா(33), கேப்டன் டிவிலியர்ஸ்(29), டுமினி(38), பார்னல்(22) கைகொடுக்க, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
நல்ல துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு நிகோல்(33), கப்டில்(26) இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். கேப்டன் பிரண்டன் மெக்கலம்(18) ஓரளவுக்கு கைகொடுத்தார். ஒருகட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 156 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது. கடைசி இரு ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தான் தேவைப்பட்டன. இந்த நேரத்தில் போத்தா சுழலில், அரைசதம் கடந்த ஜெசி ரைடர்(52), வெளியேற, நிலைமை தலைகீழாக மாறியது.
பிரி-ஹிட் வீண்:
கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. டி லாங்கே பந்துவீசினார். முதல் பந்தில் பிராங்க்ளின் ஒரு ரன் எடுத்தார். 2வது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் நாதன் மெக்கலம்(0) அவுட்டானார். 4வது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் பிரேஸ்வல்(0) அவுட்டானார். 6வது பந்தில் ஒரு சிக்சர் தேவைப்பட்டது. இம்முறை டி லாங்கே நோ-பால் வீச, உதிரி சேர்த்து 2 ரன்கள் கிடைத்தன. தவிர, பிரி-ஹிட் வாய்ப்பும் கிடைக்க, டென்ஷன் எகிறியது. மீண்டும் வீசப்பட்ட இந்த பந்தில் சவுத்தி பவுண்டரி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு ரன் கூட எடுக்கத் தவற, தென் ஆப்ரிக்கா பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
மூன்று ரன்களில் திரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி தொடரை 2-1 என கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருதை போத்தா வென்றார்.
தென் ஆப்ரிக்கா திரில் வெற்றி * கடைசி பந்து வரை டென்ஷன்
தினமலர் – பு, 22 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- ஒரு ரன்னில் மும்பை "திரில்' வெற்றி: …
- டிவிலியர்ஸ் அதிரடி: பெங்களூரு அசத்தல் …
- சென்னைக்கு "டென்ஷன்' வெற்றி : ஆல்பி, …
- சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி! * …
- பெங்களூரு கலக்கல் வெற்றி: கெய்ல் …
- கங்குலி அணிக்கு மீண்டும் "அடி':டெக்கான் …
- சென்னை கிங்ஸ் "சூப்பர் வெற்றி: டில்லி …
- டில்லியிடம் மும்பை "சரண்டர்': சேவக், …
- பிளே-ஆப் சுற்றில் டில்லி! * பஞ்சாப் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 50 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 51 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
