தேனி:தேனி மாவட்டத்தில், பிப்., 3ல் பல்லவராயன்பட்டியிலும், பிப்., 10ல் அய்யம்பட்டியிலும் ஜல்லிக்கட்டு நடத்த, மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இங்கு ஜல்லிக்கட்டு நடத்த தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாசில்தார், கால்நடை இணை இயக்குனர், கால்நடை டாக்டர்கள், டி.எஸ்.பி., மற்றும் ஜல்லிக்கட்டு நடத்தும் பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், ஜல்லிக்கட்டு நடத்த, ஐகோர்ட் விதித்த இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ள 31 நடைமுறைகளையும், முழுமையாக அமல்படுத்த வேண்டும். மாடுகளை பதிவு செய்ய வேண்டும். நல்ல முறையில் தீவனம், குடிநீர் வழங்க வேண்டும். கொம்புகளுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும். கொம்பு முனையில் பாதுகாப்பு கவர் அமைக்க வேண்டும். மாடுகளுக்கு மிளகாய்பொடி, சேறு, சகதி பூசக்கூடாது. சாராயம் உட்பட போதைப்பொருள் கொடுக்க கூடாது.
பார்வையாளர் மாடத்திற்கு பொதுப்பணித்துறை உறுதிச்சான்று பெற வேண்டும். ஒவ்வொரு மாடாக அனுப்பி வைக்க வேண்டும். மாடு பிடிப்பவர்கள் சீருடை அணிய வேண்டும். போதைப்பொருள் உட்கொள்ள கூடாது. தீயணைப்பு, மருத்துவ, பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது.
இதனை முழுமையாக அமல்படுத்துவதாக ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து பிப்., 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பல்லவராயன்பட்டியிலும், பிப்., 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அய்யம்பட்டியிலும் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம், என அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.
தேனி மாவட்ட ஜல்லிக்கட்டு தேதி மாவட்ட நிர்வாகம் அனுமதி
தினமலர் – ச, 12 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 23 நிமிடங்கள் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 34 நிமிடங்கள் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 39 நிமிடங்கள் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 43 நிமிடங்கள் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 49 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்!
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்ஆசிய கால்பந்து:இந்தியா மீண்டும் தோல்வி
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்!
தினமலர் - 1 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி : முத்தரப்பு தொடரில் பங்கேற்பு
தினமலர் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
