மும்பை: நடப்பு 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, இரண்டாவது காலாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்டிருந்த மொத்த முதலீட்டில் இருந்து, 1,957 கோடி ரூபாயை விலக்கி கொண்டன. பங்கு முதலீடுஅதேசமயம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனங்களின் முதலீடு, 43 ஆயிரத்து 951 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்நிறுவனங்கள், பங்கு சந்தைகளில், 5,171 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன.டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்ட கடும் சரிவு, பொருளாதார மந்த நிலை, நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்தது போன்றவற்றால், நாட்டின் பங்கு வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு வெகுவாக சரிவடைந்துள்ளது.பொருளாதார வளர்ச்சிகடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஒன்பது ஆண்டுகளில், இல்லாத அளவிற்கு, 6.5 சதவீதமாக குறைந்து போனது. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டிலும், பொருளாதார வளர்ச்சி, 5.3 சதவீதம் என்றளவில் மிகவும் குறைந்திருந்தது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, 0.1 சதவீதம் என்றளவில் குறைந்திருந்தது.அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குச் சந்தையில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 1,109 கோடி ரூபாய், மே மாதத்தில் 347 கோடி ரூபாய் மற்றும் ஜூன் மாதத்தில், 501 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன.அன்னிய நிதி நிறுவனங்கள், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 1,463 கோடி ரூபாயை கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தன. இது, சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 19 ஆயிரத்து 398 கோடி ரூபாயாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.கடன் பத்திரங்கள்நடப்பு 2012ம் ஆண்டில், சென்ற ஜூன் மாதம் வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில், 41 ஆயிரத்து 993 கோடி ரூபாய் அளவிற்கு நிகர முதலீடு மேற்கொண்டுள்ளன. இதே காலத்தில், கடன் பத்திரங்களில், இவற்றின் நிகர முதலீடு, 20 ஆயிரத்து 861 கோடி ரூபாயாக உள்ளது.ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்', 0.15 சதவீதம் உயர்ந்துள்ளது.
பங்கு சந்தையின் சுணக்க நிலையால்... அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.1,957 கோடி விலக்கல்
தினமலர் – தி, 2 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
ரம்மி
10 புகைப்படங்கள் - 9 நிமிடங்கள் முன்சுந்தர பாண்டியன்
14 புகைப்படங்கள் - 13 நிமிடங்கள் முன்தலைவா
9 புகைப்படங்கள் - 20 நிமிடங்கள் முன்ஈர வெயில்
5 புகைப்படங்கள் - 28 நிமிடங்கள் முன்பேரு மட்டும் தான் பவித்ரா
8 புகைப்படங்கள் - 35 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
- அன்னிய நிதி நிறுவனங்களின்பங்கு முதலீடு …
- பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.22,749 …
- முன்பேர சந்தைகளில்ரூ. 14.77 லட்சம் …
- நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு …
- கைவினை பொருட்கள் ஏற்றுமதி13 சதவீதம் …
- பொது துறை நிறுவனங்களிடம் ரூ.1.62 …
- தரை விரிப்புகள் ஏற்றுமதிரூ.491 …
- கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத …
- தொலைத்தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை …
- எஸ் அண்டு பி எச்சரிக்கை: மத்திய …
- வெளிநாடு வாழ் இந்தியர்களின்டெபாசிட் …
- கட்காரியின் நிறுவனங்கள்:ரூ.7 கோடி …
- "நிப்டி' குறியீட்டு எண் மீண்டும்6,000 …
- துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 4.35 …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பி.சி.சி.ஐ. சீனிவாசன் வீட்டில் சோதனை
தினமலர் - 1 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்கிரிக்கெட் சூதாட்டத்தில் மேலும் பல அணிகளுக்கு தொடர்பு? வலை விரித்து காத்திருக்கிறது போலீஸ்
தினமலர் - 2 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி!
தினமலர் - 2 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்கலையும் தொழில்நுட்பமும் இணைந்த ஸ்கான்டிநேவியன் வடிவமைப்பு வோல்வோ கார்கள்!
தினமலர் - 2 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர்
தினமலர் - 2 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

