பசுமை திட்டம் துவக்கம்

ராஜபாளையம் :தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, பசுமை திட்டத்தின்படி, வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும்விழா, ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று துவங்கியது. கன்சர்வேட்டர் சேகர் குமார் நீரஜ் துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் தனலட்சுமி மரகன்றுகள் நட்டார். ஆஸ்பத்திரி, பள்ளிகள், பொது இடங்களில் 40 ஆயிரம் கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளன. ஏற்பாடுகளை ரேஞ்சர் ரவீந்திரன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.