விளாத்திகுளம்:விளாத்திகுளம் யூனியனில் பஞ்.,தலைவர்களுக்கான அடிப்படை
பயிற்சி முகாம் நடந்தது.கிராம பஞ்.,தலைவர்களுக்கான ஐந்து நாட்கள் அடிப்படை
ஆதாரப் பயிற்சி முகாம் விளாத்திகுளம் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில்
நடந்தது. முகாமிற்கு யூனியன் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
பிடிஓ.,நம்மாழ்வார் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில்
பஞ்.,தலைவர்களுக்கு பஞ்.,நிர்வாகம் உட்பட பல்வேறு விவரங்கள் குறித்து துணை
வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
கல்பனாதேவி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் குளத்தூர், சூரங்குடி,
வைப்பார், வேம்பார், வேம்பார் தெற்கு, ஆற்றங்கரை, மேல்மாந்தை, நெடுங்குளம்,
தத்தனேரி, ஜமீன் செங்கல்படை, கீழவைப்பார், வேலிடுபட்டி, பேரிலோவன்பட்டி,
பூசனூர், ஜமீன் செங்கல்படை, அயன்செங்கல்படை, வெள்ளையம்மாள்புரம் உட்பட 51
கிராம பஞ்.,தலைவர்கள் கலந்து கொண்டனர்.
