பட்டாயா ஓபன் டென்னிஸ்: பைனலில் சானியா ஜோடி

பட்டாயா:

பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சானியா மிர்சா, ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ஜோடி முன்னேறியது.
தாய்லாந்தில் பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் இந்தியாவின் சானியா மிர்சா, ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ஜோடி, உஸ்பெகிஸ்தானின் அகுல், ஜப்பானின் டேட் கிரம் ஜோடியை சந்தித்தது.
இதன் முதல் செட்டை 6-4 என கைப்பற்றியது சானியா ஜோடி. தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா ஜோடி, 6-4 என எளிதாக கைப்பற்றியது. 1 மணி நேரம், 10 நிமிட போராட்டத்தின் முடிவில், 6-4, 6-4 என்ற நேர்செட்களில் வென்ற சானியா ஜோடி, பைனலுக்கு முன்னேறியது.
இன்று நடக்கும் பைனலில் சீன தைபேயின் ஹாவோ, யங்-ஜன் ஜோடியை சந்திக்கிறது.