தேடல்

பட்டாவில் பெயர் சேர்ப்பதில் குளறுபடி

கோத்தகிரி:பட்டாவில் பெயர் சேர்ப்பதில் உள்ள குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பொரங்காது சீமை நலச்சங்க பொதுசெயலாளர் காரிகவுடர், குன்னூர் ஆர்.டி.ஓ., வுக்கு அனுப்பிய மனு: சொத்துக்கள் விற்பனை செய்யும்போது, கிரையதாரர், கிரையம் பெற்றவரின் பெயருக்கு, பட்டா ஆவதற்கு தேவையான பட்டா மனுவில் கையெழுத்திட்டு, பத்திர பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது. சார்பதிவாளர் அலுவலத்தில் இருந்து, வாரம் ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ, காலமுறை விவர அறிக்கையாக பெற்று, சம்மந்தப்பட்ட நிலம் கிரையத்திற்கு பெற்றவரின் பெயரில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், இந்த செயல்முறை கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பின்பற்றுவதில்லை.இதனால், பொதுமக்கள் தங்களுடையை பெயர்களை பட்டாவில் சேர்க்க தாலூக அலுவலகத்துக்கு பலமுறை சென்று, பல காரணங்களால் பட்டாவில் பெயர் சேர்க்க முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் நலன்கருதி, பட்டாவில் பெயர் சேர்ப்பது குறித்து, சம்மந்தப்பட்ட சார் பதிவாளரிடம் இருந்து, குறிப்பிட்ட காலத்தில் கிரையதாரர்கள் சொத்து கிரையம் பெற்றவரின் பெயருக்கு பட்டா மாற்றம் மற்றும் சிட்டாவில் பெயர் சேர்த்தல் போன்ற முக்கிய வேலைகளை, பட்டா மனு கிடைத்தவுடன் கிரையதாரரின் பெயரை நீக்கி, சிட்டாவில் பெயர் தாக்கல் செய்து, மனு தாரர்களுக்கு தபால் மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.