நகரி : ஆந்திராவில், பன்றி பந்தயத்தில் ஈடுபட்ட, 42 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, பன்றிகள் உட்பட ஒரு லட்ச ரூபாய் பணம், 11 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குதிரைப் பந்தயம், கோழிப் பந்தயம் நடப்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆந்திராவில் தற்போது, பன்றிகளைச் சண்டைக்கு விட்டு, பந்தயம் கட்டும் வினோத சம்பவம் நடந்து வருகிறது.இந்த பந்தயம், ஆந்திராவில், கடப்பா மாவட்டம், மைதுகூடு அடுத்த, மிட்டமானுபள்ளி ஏரிக்குள் நடந்தது. தகவலறிந்த மைதுகூடு போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்ததில், பன்றி பந்தயம் நடத்தப்படுவதும், பன்றிகளின் மீது பணம் கட்டுவதும் தெரிய வந்தது.இது தொடர்பாக, வெங்கடய்யா, பீட்டானியை சேர்ந்த சுப்பநாயுடு உட்பட, 42 பேரை, போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, ஒரு லட்சம் ரூபாய் பணம், 11 அலைபேசிகள், இரண்டு பந்தய பன்றிகளை பறிமுதல் செய்தனர். கைதான அனைவரையும், போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
பன்றி பந்தயம்: 42 பேர் கைது
தினமலர் – ச, 14 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 18-6-2013
13 புகைப்படங்கள் - 7 நிமிடங்கள் முன்தமிழகம் 18-6-2013
24 புகைப்படங்கள் - 3 நிமிடங்கள் 6 வினாடிகள் முன்பொது 18-6-2013
19 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்சம்பவம் 18-6-2013
13 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்அரசியல் 18-6-2013
22 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பாகம் இரண்டு, ஆனால் கதை வேறு! கமல் மட்டும் விதிவிலக்கு!!
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்தங்கம் விலை உயர்வு : சவரனுக்கு ரூ.168 அதிகரிப்பு
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்செல்லப் பிராணிக்கும் மேக்கப்பா? த்ரிஷாவின் டுவிட்ஸ்
தினமலர் - 1 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்அத்வானியை சந்தித்தார் மோடி ! அயோத்தி செல்லவும் திட்டம் ?
தினமலர் - 1 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்கருவில் இருக்கும் குழந்தையை கண்டறிந்தாரா நடிகர் ஷாருக்?
தினமலர் - 2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்
