பயோமெடிக்கல் துறைதேசிய மாநாடு

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில்,

பயோமெடிக்கல் துறை ஒருநாள் தேசிய மாநாடு கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது.

மாநாட்டுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன்

தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் நீல்ராஜ், துணை தலைவர்

கதிரவன், இயக்குனர்கள் பூபதி, மணி, நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர்

முன்னிலை வகித்தனர்.தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும்

மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரெங்கநாதன் மாநாட்டை துவக்கி

வைத்து பேசினார். மாநாட்டில் கல்லூரி முதல்வர் டாக்டர் சார்லஸ்,

கல்லூரியின் புல முதல்வர் சேகர், துணை முதல்வர் நந்தகுமார் ஆகியோர்

வாழ்த்துரை வழங்கினர்.