பேரூர்:அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், முத்திபாளையத்தில் பள்ளிச் செல்லா குழந்தைகள் மறுகணக்கெடுப்பு பணி நடக்கிறது.கோவை மாவட்ட முதன்மை, கூடுதல் முதன்மை, மாவட்ட தொடக்கல்வி அலுவலர்களின் உத்தரவுப்படி, பள்ளிச்செல்லா குழந்தைகளின் மறுகணக்கெடுப்பு நடந்து வருகிறது. தொண்டாமுத்தூர் அருகே, முத்திபாளையத்தில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் திப்பன், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் பள்ளிச்செல்லா குழந்தைகளின் மறுகணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். பாக்குத் தொழிலில் ஈடுபட்டுள்ள அசாம் மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் 20 பேர், பள்ளிச் செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 20 குழந்தைகள் பெயர் பட்டியல் எடுக்கப்பட்டு, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஏ.இ.ஓ., தமிழ்ச்செல்வி, ஆசிரியர் பயிற்றுநர்கள் தண்டாயுதபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பள்ளி செல்லா குழந்தைகள் மறுகணக்கெடுப்பு பணி
தினமலர் – ச, 3 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இந்தியாவில் ரூ.18,999க்கு நோக்கியா லூமியா 720
தினமலர் - 1 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்சீனப்படைகளின் ஊடுருவல் ஒரு சம்பவம்: பிரதமர் மன்மோகன் சிங்
தினமலர் - 1 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்!
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
