தேடல்

பள்ளி விடுதிகளில் திடீர் ஆய்வு : கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம்

திண்டுக்கல் : தமிழகத்தில் பள்ளி விடுதிகளிலும் ஆய்வு நடத்தி, அறிக்கை தர

அரசு உத்தரவிட்டுள்ளது.மாநிலத்தில் தனியார் பள்ளி விடுதிகள்,

ஆதிதிராவிடர், பிற்பட்ட விடுதிகளில் மாணவ, மாணவிகள் தங்கி படிக்கின்றனர்.

இவற்றில் பல விடுதிகளில் வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. படுக்கை

வசதி, காற்றோட்டமான ஜன்னல், ஒரு அறைக்கு எத்தனை மாணவ, மாணவிகள் தங்கும்

அளவிற்கு அறை உள்ளது, எவ்வளவு பேர் தங்கியுள்ளனர். கழிப்பறை, தண்ணீர் வசதி,

சுகாதாரமான சமையல் அறை போன்றவற்றை ஆய்வு செய்ய முதன்மை கல்வி அதிகாரிக்கு

உத்தரவிடப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்,

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கொண்ட குழு மாதந்தோறும் ஆய்வு செய்ய

வேண்டும். அறிக்கையை கலெக்டரிடம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.