சென்னை:சென்னை பஸ் நிலையங்களில், கழிப்பறை வசதி இல்லை என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., சவுந்திர ராஜன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
சவுந்திரராஜன் - மார்க்சிஸ்ட்: சென்னையில் திருவேற்காடு, அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய இரு பஸ் நிலையங்களை தவிர, மற்ற பஸ் நிலையங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும், பெண் பயணிகளுக்கு அடிப்படை வசதியும் இல்லை. கழிப்பறை வசதியும் இல்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜி: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 28 பஸ் நிலையங்கள்
பராமரிக்கப்படுகின்றன. இதில், 26 பஸ் நிலையங்களில் கழிப்பறை வசதிகளும், குடிநீர் வசதிகளும் உள்ளன.
அய்யப்பன்தாங்கல், சுங்கச்சாவடி பஸ்நிலையங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகளை இந்த ஆண்டில் செய்து கொடுக்க, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அந்த பணிகள் நடந்து வருகின்றன.
சவுந்திரராஜன்: கழிவறைகள் கூட, கட்டண கழிப்பிடமாக உள்ளது. அதுவும் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பல இடங்களில் பெண்களுக்கு தனியாக கழிப்பறை வசதி இல்லை.
அமைச்சர்: 26 பஸ் நிலையங்களிலும், பெண் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் உள்ளன. குடிநீர் வசதியும் உள்ளது.
சென்னையில் உள்ள, 18 பணிமனைகளில் ஓட்டுனர் ஓய்வு அறை, 6 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 115 பணிமனைகளில், 45 லட்சம் ரூபாய் மதிப்பில் ஓட்டுனர் ஓய்வு அறை மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஒரு பணிமனை கூட புதியதாக துவங்கவில்லை.
இந்த ஆட்சியில் ஏழு புதிய பணிமனைகளை, சென்னையில் துவக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான
டெண்டர் விடப்பட்டு பணிகள் நடக்கிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
பஸ் நிலையங்களில் கழிப்பறை இல்லை மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
தினமலர் – வி, 7 பிப்., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- 7 ரூபாய்! : 100 மி.லி., "குடிநீர் …
- மருத்துவ படி உயர்வு
- வாழ்த்துரைகளை மட்டுமே கேட்க முடிந்த …
- கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்கமுடியாது: …
- ஒகேனக்கல் கூட்டு குடிநீர்திட்டம்: …
- மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் …
- தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் …
- ஒரு லோக்சபா தொகுதி கூட பாதுகாப்பு …
- பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் …
- முதல்வர் யார்? : கர்நாடக காங்., …
- கர்நாடக எம்.எல்.ஏ.,க்களில் …
- குளுகுளு' பயணி நிழற்குடை சென்னைக்கு …
- தமிழ்த் தாய்க்கு சிலை:ஆங்கில பாடமொழியா?: …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கால்பந்து: பேயர்ன் முனிக் அணி சாம்பியன்
தினமலர் - 58 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்கம் விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்சீனாவுடனான எல்லை பிரச்சினை: ஒத்துழைப்பும், போட்டியும் உள்ளது என்கிறார் அந்தோனி
தினமலர் - 1 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்அம்மா உணவகங்களில் பொங்கல் விற்பனை: மக்கள் விருப்பம்
தினமலர் - 2 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்குருபெயர்ச்சி - கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?
தினமலர் - 2 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
