துப்பாக்கி சுடுதல்: இந்திய அணி ஏமாற்றம்

தோகா: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் அணிகள் பிரிவில், இந்திய அணி நான்காவது இடம் பிடித்து ஏமாற்றியது.
கத்தார் தலைநகர் தோகாவில், 12வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் அணிகள் பிரிவில், இந்திய அணி 1724 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்தது. இந்தியா சார்பில் அனிசா சயீத், ராஹி சர்னோபத், அனு ராஜ் சிங் விளையாடினர். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சீனா (1757 புள்ளி), தென் கொரியா (1737), கஜகஸ்தான் (1727) முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.