ஸ்ரீவைகுண்டம் :ஸ்ரீவைகுண்டத்தில் பைக்கில் தவறிவிழுந்து போஸ்டாபீஸ் ஊழியர் பலியானார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த
நமச்சிவாயம் மகன் சுப்பிரமணியன்(50). இவர் பணி முடிந்து வீட்டுக்கு
திரும்பும் போது பைக்கில் இருந்து தவறிவிழுந்து தலையில் பலத்த காயத்துடன்
திருநெல்வேலி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை
பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார்
விசாரணை செய்து வருகின்றனர்.
