கோல்கட்டா:ஆணா..பெண்ணா என்ற பாலின சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிராமனிக்கிற்கு குரோமசோம் சோதனை நடத்தும்படி கோர்ட் உத்தரவிட்டது.மேற்குவங்கத்தை சேர்ந்தவர் பிங்கி பிரமானிக். ஆசிய விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை சுமத்தினார். பிங்கி உண்மையில் ஒரு ஆண் என்றும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் போலீசில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பிங்கிக்கு தனியார் மருத்துவமனையில் பாலின சோதனை நடத்தப்பட்டது. இதில், அவர் ஒரு ஆண் என்பது தெரிய வந்தது. பின் அரசு மருத்துவமனையில் இவருக்கு பல்வேறு சோதனை நடத்தப்பட்டன. ஆனால் குரோமசோம் சோதனை செய்யும் வசதி இல்லை என்று அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து குரோமசோம் சோதனைக்காக பிங்கியின் ரத்த மாதிரியை ஐதராபாத் அல்லது மும்பைக்கு அனுப்புமாறு பாராசட் தலைமை மாஜிஸ்திரேட் அனிதா மாத்தூர் உத்தரவிட்டார். பிங்கியின் ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டு, நீதிமன்ற காவல் ஜூலை 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
பிங்கிக்கு புது சோதனை: கோர்ட் உத்தரவு
தினமலர் – வெ, 29 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பிக்சிங்கில் சிக்குகிறாரா கெய்ல்
தினமலர் - 1 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்க முடியாது என்கிறார் சீனிவாசன்
தினமலர் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு
தினமலர் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்ஒகேனக்கல் கூட்டு குடிநீர்திட்டம்: முதல்வர் ஜெ., துவக்கி வைக்கிறார்
தினமலர் - 1 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்போலீஸ் காவலில் சூதாட்ட குருநாத்
தினமலர் - 1 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

