பி.ஜி.பி., பள்ளியில்கண் பரிசோதனைமுகாம்

நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வாசன் ஐ கேர் கண் மருத்துவமனை சார்பில், கண் பரிசோதனை முகாம் நடந்தது.

பள்ளி முதல்வர் ரஞ்சனி தலைமை வகித்தார். தொடர்ந்து, வாசன் ஐ கேர்

மருத்துவக் குழுவினர், பள்ளி மாணவ, மாணவியருக்கு கண் பரிசோதனை செய்தனர்.

மேலும், கண் குறைபாடு உள்ளோருக்கு மருத்தவமனையில், ஒரு மாதத்துக்கு இலவச

சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவ,

மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.