பாட்மின்டன்: சிந்து சாம்பியன்

பெங்களூரு:

தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.எஸ்.பி.பி., அணியின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
76வது தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பைனலில், பி.எஸ்.பி.பி., அணியின் சிந்து, ஏ.ஏ.ஐ., அணியின் நேகா பண்டிட்யை சந்தித்தார். இதில் சிந்து 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், பி.எஸ்.பி.பி., அணியின் சவுரப் வர்மா, சக வீரர் சாய் பிரனீத்தை சந்தித்தார். இதில் சவுரப் வர்மா 24-22, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.