மக்காவு:
உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் போட்டியில் இந்தியாவின் செய்னா நேவல் வெற்றி பெற்றார்.உபர் (பெண்கள்), தாமஸ் (ஆண்கள்) கோப்பை பாட்மின்டன் தொடர் சீனாவில் நடக்கிறது. இதில் இந்திய அணி லீக் போட்டியில் மலேசியாவை சந்தித்தது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் செய்னா நேவல், மலேசியாவின் ஜிங் டியை 21-17, 21-16 என்ற கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சிந்து, மலேசியாவின் லைடியாவை வென்றார்.
ஆனால் பெண்கள் இரட்டையரில் ஜுவாலா, பொன்னப்பா ஜோடி, மற்றொரு இந்திய வீராங்கனை சயாலி கோகலே ஆகியோர் தோல்வியடைந்தனர். இதனால் இப்போட்டியை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இழந்தது.
ஆண்கள் அபாரம்:
தாமஸ் கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி, மக்காவு சீன அணியை சந்தித்தது. இதில் இந்திய வீரர்கள் அஜய் ஜெய்ராம், சாய் பிரனீத் உட்பட அனைவரும், பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் வென்றனர். இதனால் 5-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
