தேடல்

பெட்ரோல் விற்பனை ஒருவர் அதிரடி கைது

கெங்கவல்லி: கெங்கவல்லி கடை வீதி பகுதியில், பெட்டிக் கடையில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்வதாக, போலீஸாருக்கு புகார் சென்றது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நடராஜன் தலைமையிலான போலீஸார், பெட்டிக் கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, பெட்ரோல் விற்பனை செய்த பெட்டிக் கடை உரிமையாளர் ஜானகிராமன் (60) என்பவரை கைது செய்தனர். அந்த கடையில் இருந்து, பத்து லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, எளிதில் தீப்பற்றும் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை அனுமதியின்றி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை செய்தனர்.