தேடல்

பெண்களுக்கு உள் ஒதுக்கீடுஇந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்

புதுச்சேரி:அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.இந்திய மாதர் தேசிய சம்மேளன 14வது மாநில மாநாடு நேற்று அரியாங்குப்பம் பாலாம்மாள் நினைவு அரங்கத்தில் நடந்தது. வசந்தி, தமயந்தி, லட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். மால செயலாளர் ஹேமலதா வரவேற்றார். செயலாளர் விசுவநாதன் பங்கேற்று துவக்கவுரையாற்றினார்.பொதுச் செயலாளர் சரளா மாநாட்டு அறிக்கை வாசித்தார். ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் அபிஷேகம், கீதநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாநில அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் பெண்கள் நலத்திட்டங்களுக்கு என கூடுதல் நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும். மகளிர் ஆணையத்தை சட்டப்பூர்வமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெண் காவலர் தேர்வில் உடற்தகுதி அளவை குறைக்க வேண்டும்.தனியார் நிறுவனங்களிலும், தொழிற் சாலைகளிலும் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.