பைனலில் சிந்து

பெங்களூரு:

தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பைனலுக்கு பி.எஸ்.பி.பி., அணியின் சிந்து, சவுரவ் வர்மா முன்னேறினர்.
76வது தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், பி.எஸ்.பி.பி., அணியின் சவுரப் வர்மா, சக வீரர் பர்னோயை சந்தித்தார். இதில் சவுரப் வர்மா 21-23, 22-20, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில், பி.எஸ்.பி.பி., அணியின் சிந்து, சக வீராங்கனை அதிதீயை 21-10, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன் இரட்டையர் பிரிவில், பி.எஸ்.பி.பி., அணியின் அபர்ணா பாலன், ஏ.ஏ.ஐ., அணியின் சிக்கி ரெட்டி ஜோடி, அரியானாவின் கல்யா, ஜோதி ஜோடியை 21-19, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.