தேடல்

புனேவுக்கு பயணிக்கிறார் ஷிண்டே

டார்ஜிலிங் : மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நாளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு பயணம் செய்ய இருக்கிறார். மின்துறை அமைச்சராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே உள்துறை அமைச்சரான அன்று புனேவுக்கு பயணம் செய்வதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் புனேயின் முக்கிய இடங்களில் 4 குண்டுகள் வெடித்தன. மேலும் இரண்டு வெடிகுண்டுகள் செயல் இழக்கப்பட்டன. இதனையடுத்து அவரது புனே பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை தான் புனே செல்ல இருப்பதாக செய்தியாளர்களிடம் ஷி்ண்டே தெரிவித்துள்ளார்.