தேடல்

பாப்பிரெட்டிபட்டி அருகே தொழிலாளி தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பறையப்பட்டியை சேர்ந்தவர் முருகேஷ் (30). இவரது மனைவி மயில் (22). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், தகராறு ஏற்பட்டதால் வெறுப்படைந்த மயில் கோவையில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்றார்.
நேற்று முன்தினம் கோவை சென்ற முருகேஷ், மயிலுவை ஊருக்கு அழைத்து வந்து ஊர் பெரியவர்களை வைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், மயில் முருகேஷுடன் குடும்பம் நடத்த வரமுடியாது என கூறிவிட்டார்.
இதனால், மனமுடைந்து முருகேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏ.பள்ளிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.