திருவாரூர்: பாமர மக்கள் போற்றும் தலைவராக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளங்குகிறார், என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசினார்.
தமிழக முதல்வர் பிறந்தநாளையொட்டி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
மரக்கன்று நடும் விழாவில் கலெக்டர் நடராசன் தலைமை வகித்து பேசுகையில், 1800-1900ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் உலகத்தில் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு, அதற்கு நிலக்கரிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. நிலக்கரி பயன்பாட்டால் கார்பைன்-டை-ஆக்ஸைடு அதிகமாகி புவி வெப்பம் அடைந்தது. இதுபோன்று நடப்படும் மரக்கன்றுகள், காற்று மண்டலத்தில் கார்பைன்-டை-ஆக்ஸைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு, பதிலுக்கு ஆக்ஸிஜன் வாயு வெளியிடுவதால் புவி வெப்பமாவது தடுக்கப்படும், என்று பேசினார்.
விழாவில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
மக்களுக்காக தலைவர்கள் தாங்கள் வாழ்ந்த காலங்களில் என்ன செய்தார்கள்? என, பேசப்படும்போது, பாமர மக்கள் போற்றும் வகையில், மறைந்த எம்.ஜி.ஆர்., வாழ்ந்தார். அவருக்கு அடுத்தபடியாக சாதாரண மக்களும் பாராட்டும் வகையில் முதல்வர் ஜெ., சாதனை படைத்து வருகிறார்.
பிறந்தநாள் விழா என்றால் அண்டா, உண்டியல் போன்றவற்றை வைத்து வசூல் செய்யும் தலைவர்கள் வாழும் இந்நாட்டில், ஏழை மக்களுக்காக பயன்படும் வகையில், நலத்திட்ட உதவிகளை அறிவித்தும், வரும் சந்ததியர்களுக்காக மரக்கன்றுகளை வைத்தும் தனது பிறந்தநாளை முதல்வர் கொண்டாடி வருகிறார்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை பிற மாநிலங்களும் தற்போது பின்பற்றி வருகின்றது. அதுபோன்ற உன்னதமான திட்டம் தான் மரக்கன்றுகள் நடும் திட்டமும் ஆகும். கடந்த ஒன்பது மாத கால ஆட்சியில் தமிழக மக்களுக்காக பல்வேறு உன்னதமான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வரும் வேளையில், மின் தட்டுப்பாடு என்ற காரணத்தை வைத்து, சில விஷமிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம், மின் உற்பத்திக்கான நடவடிக்கைகளை கடந்த தி.மு.க., ஆட்சி எடுக்காததே ஆகும். இன்னும் ஓரிரு மாதங்களில் மின்தட்டுப்பாடு சீராக்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
டி.ஆர்.ஓ., ஜீவக்கனி, நகராட்சி தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜலட்சுமி, திருவாரூர் யூனியன் தலைவர் மலர் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர். வேளாண் பயிற்சி
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு வேளாண் வணிகம் சார்ந்த பயிற்சி, திருவாரூர் மாவட்ட துணை வேளாண் இயக்குனர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குனர் நடேசன் முன்னிலை வகித்தார். வேளாண் வணிக அலுவலர் சாமிநாதன் வரவேற்றார். இதில் விவசாயிகளை உற்பத்தி சார்ந்த வேளாண் எனும் நிலையிருந்து, வணிகம் சார்ந்த வேளாண் எனும் கோட்பாட்டுக்கு தயார் செய்யும் நோக்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குனர் சீனிவாசன், வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் மாரிமுத்து ஆகியோர் பயிற்சி அளித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
பாமர மக்கள் போற்றும் தலைவராக ஜெ., விளங்குகிறார்
தினமலர் – ச, 25 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- என்றென்றும் முதல்வருக்கு துணை நிற்போம் …
- விஜயகாந்த் எதிர்கட்சிதலைவராக வர …
- முதல்வரின் திட்டங்கள் கிராம மக்களை …
- விவசாயிகள் ஏற்றம் பெற ஜெ., திட்டம்: …
- தமிழக அரசு லேப்-டாப் வழங்குவது …
- பட்டாசு தொழிலாளர்கள் நலனில் முதல்வர் …
- ஒரத்தநாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு …
- தமிழகத்தில் மே தினம் கொண்டாட அ.தி.மு.க.,வுக்கு …
- பார்லிமென்ட் தேர்தலில் மாற்றம் வரும்: …
- தி.மு.க., இனி தேறாது: முன்னாள் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 50 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 51 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
