தேடல்

பிரசல்ஸ் வர்த்தக மாநாட்டில் ஆனந்த் சர்மா பங்கேற்பு

பிரசல்ஸ்:பெல்ஜியம் நாட்டில் நடக்கும் ஐரோப்பிய வர்த்தக மாநாட்டில், இந்தியா முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில், ஐரோப்பிய கூட்டமைப்புகளின் வர்த்தக மாநாடு, வரும் 28ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு, சில முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், விசா வழங்குவதில் பிரச்னை உள்ளது. இது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இன்சூரன்ஸ், வங்கி, சில்லறை வர்த்தகம் போன்றவற்றை, இந்தியாவில் துவக்க ஐரோப்பிய நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன. இது தொடர்பாகவும், வர்த்தக மாநாட்டில் ஆராயப்பட உள்ளது.கிரீஸ் பிரதமர் அந்தோணி சமராஸ், கண் சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அவர், இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.