தேடல்

பிரணாப்புக்கு வங்கதேச அதிபர், பிரதமர் வாழ்த்து

டாக்கா: இந்திய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு வங்கதேச அதிபர்ஜில்லூர் ரஹ்மான், பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். ஷேக் ஹசீனா பிரணாப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு உறவுகளும் மேம்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.