இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கண்ணா உடல்நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமாக இருக்கிறார். 1966-ம் ஆண்டு அஹாரி காத் என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ் கண்ணா. தொடர்ந்து ஆராதனா, ராஸ், பரோன் கே சப்னா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1960-70களில் முன்னணி கதாநாயகராக ஜொலித்த ராஜேஷ் கண்ணா சில படங்களை தயாரித்தும், சில பாடல்களை பாடியும் உள்ளார்.
தற்போது 70வயதாகும் ராஜேஷ் கண்ணாவுக்கு கடந்த ஒரு வாரமாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக உடல் உணவு உட்கொள்ளமுடியாமல் அவதியுறுவதாகவும், தீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மேலாளர் அஷ்வின் தெரிவித்தார். மருத்துவமனையில், ராஜேஷ்கண்ணாவின் மனைவியும் நடிகையுமான டிம்பிள் கபாடியா, மற்றும் அவரது இருமகள்கள் டிங்கிள் கண்ணா, ரிங்கி கண்ணா ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா கவலைக்கிடம்!
தினமலர் – வி, 21 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பிக்சிங்கில் சிக்குகிறாரா கெய்ல்
தினமலர் - 41 நிமிடங்கள் முன்பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்க முடியாது என்கிறார் சீனிவாசன்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு
தினமலர் - 57 நிமிடங்கள் முன்ஒகேனக்கல் கூட்டு குடிநீர்திட்டம்: முதல்வர் ஜெ., துவக்கி வைக்கிறார்
தினமலர் - 1 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்போலீஸ் காவலில் சூதாட்ட குருநாத்
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

