சேலம்: சேலம் கோட்டை பகுதியில், எம்.ஜி.ஆரின் பிறந்த தினமான நேற்று, நினைவு தினம் என்று அச்சடிக்கப்பட்ட ஃபோட்டோவை வைத்து வழிபாடு நடத்தி சென்றதால், அ.தி.மு.க., வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜனவரி 17 ம் தேதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளாகும். நேற்று அவரது, 96 வது பிறந்த நாள் விழா, மாநகர பகுதி முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும், அ.தி.மு.க., வினர், எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு பொங்கல், கேசரி உள்ளிட்ட இனிப்புக்களை வழங்கினர்.
பல இடங்களில், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடத்தி பரிசு மற்றும் நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. சேலம் மாநகரின் பிரதான பகுதியான, கோட்டை நுழைவு வாயிலுக்கு முன் உள்ள பெரியார் சிலை அருகில், நேற்று, 32 வது வார்டு அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆரின் உருப்படத்துக்கு மாலை அணிவித்து, வழிபாடு நடத்தினர்.
அதில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா என்பதற்கு பதிலாக, நினைவு தினம் என்ற வாசகம் தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர், 24 ம் தேதி, எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால், நேற்று அவரது பிறந்த நாளில், முரண்பாடாக, அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரால், அப்பகுதி, அ.தி.மு.க., வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மாநகரின் பிரதான பகுதி என்பதாலும், பொங்கல் விடுமுறை முடிந்ததாலும், அந்த வழித்தடத்தில், நேற்று பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது. நினைவு தினம் என்று போட்டோ வைக்கப்பட்டுள்ளதை பார்த்த பொதுமக்கள், பிறந்த தினமா அல்லது இறந்த தினமா என்று குழப்பம் அடைந்தனர்.
பிறந்த நாளில் "நினைவு' தினம் அனுஷ்டிப்பு: அ.தி.மு.க., வினர் அதிர்ச்சி
தினமலர் – வெ, 18 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: ஐதராபாத் அணி 2/1
தினமலர் - 16 நிமிடங்கள் முன்25-ல் காஷ்மீர் செல்கிறார் பிரதமர்
தினமலர் - 46 நிமிடங்கள் முன்நீதிபதிகள் கைது வழக்கு: முஷாரப் ஜாமின் மனு தள்ளுபடி
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்ஸ்பாட்பிக்சிங்: வருமானவரித்துறை விசாரணை
தினமலர் - 1 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்ஷிலாதீட்சித் மீது லோக்ஆயுக்தா புகார்
தினமலர் - 1 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
