பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோருவதற்கு நடிகர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் தலைநகர் டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தால் தலைநகர் டில்லியே கலவர பூமியாக மாறி இருக்கிறது. சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று டில்லியில் இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும் இருக்கும் கமல், அதுதொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விஸ்வரூபம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தமக்கு மிகவும் அவமானமாக இருப்பதாகவும், ஆனால் அதற்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோருவது சரியான வழி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை என்பதே, சட்டரீதியான கொலை என்று கூறியுள்ள கமல்ஹாசன், பாலியல் பலாத்காரம் நடந்த பஸ் என்னுடையது, நடந்த இடம் என்னுடைய தலைநகரம், கற்பழிக்கப்பட்டவர் எனது சகோதரி, கற்பழித்தவர்கள் எனது சகோதரர்கள். இதனால் நான் மிகவும் அவமானப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். ஏற்கனவே தன்னுடைய விரும்பாண்டி படத்தில் மரண தண்டனையை எதிர்க்கும் வகையிலான காட்சிகளை அவர் அமைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு: கமல்ஹாசன் எதிர்ப்பு
தினமலர் – தி, 24 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- காதலியின் சம்மதத்துடன் உடலுறவு; …
- பயங்கரவாதிகளால் எனது உயிருக்கு …
- குற்றத்தின் வேர்கள்: உரத்த …
- சஞ்சய்க்கு அவகாசம் தர சுப்ரீம் …
- கன்னித்தன்மை சோதனைக்கு கைவிரல்கள்:சுப்ரீம் …
- இரு உளவாளிகளுக்கு ஈரானில் தூக்கு
- அவசர உதவி கேட்டு டில்லியில் பெண்கள் …
- விஷால் மீது நடவடிக்கை இல்லை! - …
- புனே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்படுவது …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மெகா ஊழலை ஏற்படுத்தவே கேஸ் விலை உயர்வு: குருதாஸ் தாஸ் குப்தா குற்றச்சாட்டு
தினமலர் - 54 நிமிடங்கள் முன்வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் புதிய கோபுரபணி இன்று தொடக்கம்
தினமலர் - 56 நிமிடங்கள் முன்ஸ்லோனா ஸ்டீபன்ஸ் தோல்வி
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்வள்ளி மணாளா வருக! வளமான வாழ்வை தருக! -வைகாசி விசாகம் ஸ்பெஷல்
தினமலர் - 1 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்புதிய மின்கட்டண உயர்வு குறித்த ஆணையத்தின் முடிவு : அடுத்தமாதம் வெளிவரும்
தினமலர் - 1 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

