செயின்ட் லூசியா:இந்தியா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டியில், பாவல் சதம் அடித்து கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவான முன்னிலை நோக்கி செல்கிறது.இந்தியா ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் பங்கேற்கும் மூன்றாவது மற்றும் கடைசி நான்கு நாள் போட்டி செயின்ட் லூசியாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 230 ரன்களுக்கு சுருண்டது. பின், முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் (13), பாவல் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.பாவல் அபாரம்:இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட் (15) ஏமாற்றினார். அடுத்து வந்த கார்பின் (26), பானர் (23), கார்டர் (0) நிலைக்கவில்லை. சிறிது நேரம் தாக்குப் பிடித்த பகான் (30), தாமஸ் (50) நம்பிக்கை தந்தனர். கேப்டன் வீராசாமி பெர்மால் (3) சோபிக்கவில்லை. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய துவக்க வீரர் பாவல், சதம் அடித்தார். இவர், 255 பந்தில் 139 ரன்கள் எடுத்து அவுட்டானார்.இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 320 ரன்கள் எடுத்து, 90 ரன்கள் முன்னிலை வகித்திருந்தது. மெக்கிளின் (10), ஜான்சன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஜலாஜ் சாக்சேனா 3, ஷாமி அகமது, பர்விந்தர் அவானா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பாவல் சதம்: வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை
தினமலர் – தி, 18 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - தி, 20 மே, 2013
தொடர்புடைய செய்திகள்
- நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 232 …
- பெங்களூரு அணி 106 ரன்கள்
- பிராவோ புதிய கேப்டன் : வெ.இண்டீஸ் …
- பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஸ்காட்லாந்து
- புனே அணி ஆறுதல் வெற்றி : டில்லிக்கு …
- பெங்களூரு திரில் வெற்றி: கோஹ்லி, …
- காலிஸ் கலக்கல்: கோல்கட்டா வெற்றி:பெங்களூரு …
- ஹீரோ மில்லர்: 38 பந்தில் 101 …
- கிரிக்கெட்: ஐதராபாத் அணி 75/5
- வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே …
- பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றி : மும்பை …
- கிரிக்கெட்: டில்லி அணி 100/4
- கிரிக்கெட்: டில்லி அணி 21/3
- கோல்கட்டா அணியிடம் வீழ்ந்தது புனே …
உங்களுக்கான செய்தி
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

