தீபாவளிக்கு துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி, கும்கி, போடா போடி, அம்மாவின் கைப்பேசி, அஜந்தா, காசிகுப்பம் என இன்னும் ஏகப்பட்ட பெரிய சிறிய படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இன்னமும் இருக்கிறது! ஆனால் இதில் சொற்ப எண்ணிக்கை படங்களே தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்பதுதான் நிஜம் என்கிறது கோடம்பாக்கம்!
ஆடியோ ரிலீஸ் வரை, தீபாவளி ரிலீஸ் என்று சொல்லப்பட்டு வந்த கும்கி, தீபாவளி ரேஸில் இல்லை என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. துப்பாக்கி இன்னமும் டைட்டில் உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் சமரசமாகி, சமாதானம் ஏற்பட்டுவிட்டாலும் கூட முழுதாக கோர்ட் தீர்ப்பு வராததால் தீபாவளிக்கு முன்னதாக 9ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு அதன்பின் தீபாவளி 13ம் தேதி ரிலீஸ் என்றாகிவிட்டது.
கள்ளத்துப்பாக்கி தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமானதால் நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போடா போடி பைனான்ஸ் டெபிசீட்டில் சிக்கியுள்ளதாக கேள்வி! அஜந்தா நீண்ட நெடுங்காலமாக தயாரிப்பில் இருந்து ஒருவழியாக தீபாவளிக்கு முன்பாக 9ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் தமிழகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளை தங்களது வசம் வைத்திருக்கும் உதயநிதி ஸ்டாலினின், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நீர்ப்பறவை படம் மற்றும் தீபாவளிக்கு திட்டமிடப்படாத இன்னும் சில படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக ரெடியாகி வருவதாகவும் தெரிகிறது!
நிஜம் தீபாவளி அன்று தான் தெரியும்!!
தீபாவளிக்கு கள்ளத்துப்பாக்கி வெடிக்கவில்லை! துப்பாக்கி வெடிக்குமா...? குழப்பத்தில் கோடம்பாக்கம்!!
தினமலர் – வி, 8 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்!
தினமலர் - 47 நிமிடங்கள் முன்சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்!
தினமலர் - 1 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்சென்செக்ஸ், நிப்டி சரிவில் முடிந்தது
தினமலர் - 1 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தினமலர் - 2 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

