சிதம்பரம்: சிதம்பரம் அருகே, கிராமத்திற்குள் புகுந்த இரண்டு முதலைகள் பிடிபட்டன. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த இளநாங்கூர் கிராமத்தில், நேற்று நள்ளிரவு, 500 கிலோ எடையும், 10 அடி நீளமும் கொண்ட முதலை, வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக புகுந்தது. இன்று காலை, பாலகுரு என்பவர் வீட்டுத் தோட்டத்தில் மாட்டை கடித்தது. அப்போது, நாய் குரைத்ததால், வீட்டிலிருந்தவர்கள் வந்து பார்த்த போது, முதலை இருப்பதைக் கண்டு சத்தம் போட்டனர். உடன், கிராம மக்கள் ஒன்று கூடி, முதலையைப் பிடித்து கட்டிப் போட்டனர். தகவலறிந்த சிதம்பரம் வனச்சரகர் பாபு, வனவர் மணி உள்ளிட்டோர் விரைந்து சென்று, முதலையைப் பிடித்து, வக்காரமாரி ஏரியில் விட்டனர். சிதம்பரம் ஏ.எஸ்.பி., முகாம் அலுவலகம் எதிரில், ஆயிகுளத்தில், 2 அடி நீளமுள்ள குட்டி முதலையைப் பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். நிலைய பொறுப்பு அலுவலர் சண்முகம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, அந்த முதலையைப் பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த முதலையும், வக்காரமாரி ஏரியில் விடப்பட்டது.
மக்களை அச்சுறுத்திய முதலைகள் பிடிபட்டன
தினமலர் – ஞா, 26 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 50 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 51 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
