துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி போன்ற படங்களை இயக்கிய எழில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மனம் கொத்தி பறவை எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக விஜய் டி.வி., புகழ் மற்றும் சமீபத்தில் மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் ஆத்மியா என்பவர் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் வளர்ந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு முதலில் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருந்தார். பின்னர் அவர் நீக்கப்பட்டு இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுகுறித்து எழில் கூறுகையில், ஆரம்பத்தில் யுவன் தான் இசையமைக்க இருந்தார். ஆனால் இப்படத்தின் பட்ஜெட்டிற்கு, யுவனின் இசையமைப்பு ஒத்துவராது என்பதால், அவருக்கு பதிலாக இமானை இசையமைக்க வைத்தோம். இமானும் ரொம்ப திறமையானவர் தான். யுவனிடம் நான் என்ன எதிர்பார்த்தேனோ, அதை இமான் நிச்சயம் செய்வார். அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றார்.
சிவகார்த்திகேயன் குறித்து கூறுகையில், நான் அஜித், விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட ஹீரோக்களுடன் பணியாற்றி இருக்கிறேன். இவர்கள் எல்லோரும் இன்று டாப் ஸ்டாராக இருக்கிறார்கள். அதுபோல சிவகார்த்திகேயனுக்கும் டாப் ஸ்டாராக எல்லா தகுதியும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மனம் கொத்தி பறவையில் யுவன் நீக்கப்பட்டது ஏன்...? எழில் விளக்கம்!
தினமலர் – ச, 25 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 50 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 51 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
